படப்பிடிப்புக்கு வரமறுத்த நடிகை! திடீரென நிறுத்தப்பட்ட சீரியல்! அதிர்ச்சியான நடிகை

சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அதில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. சீரியல்களில் டிஆர்பியில் முன்னனியில் இருப்பது சன் டிவி தான்.

இதில் வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அழகு. ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் ஆகியோர் நடித்து வந்தனர். அண்மையில் ரேவதிக்கு பதிலாக நடிகை ஊர்வசி நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அழகு சீரியல் முடிவடையப்போவதாவும், கிளைமாக்ஸ் வரப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்ருதி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் அவர் கடந்த படப்பிடிப்புக்கு அழைத்ததாகவும், கொரோனா என்பதாலும், சைனஸ் பிரச்சனைகள் இருப்பதாலும் ஷூட்டிங் வரமுடியாது என அழகு சீரியல் குழுவிற்கும், சானலுக்கும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் 8 ம் தேதி ஷூட்டிங் தொடங்கும் என கூறி தயாரிப்புக்குழு தெரிவித்த நேரத்தில் சீரியல் நிறுத்தப்பட்டதாக வந்த செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. காரணம் என்ன என தெரியவில்லை என கூறியுள்ளார்.

இந்த சீரியல் 700 Episode களை வெற்றிகரமாக கடந்தது குறிப்பிடத்தக்கது.