எளிய முறையில் மேங்கோ அச்சார் தயாரிக்கும் முறை

எளிய முறையில் மேங்கோ அச்சார் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

புளிப்பான மாங்காய் துண்டுகள் – ஒரு கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய், சோம்பு – தேவைக்கேற்ப,
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் தேவையான மஞ்சள்தூள், உப்பு கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும். நன்கு சுண்டிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் நல்லெண்ணெயைக் காயவைத்து, ஆறவைத்து அதனுடன் மாங்காய் கலவை, சோம்பு ஆகியவற்றை கலந்துவிடவும்.

இது ராஜஸ்தானி டிஷ். பயணங்களின்போது, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம்.