எளிய முறையில் சல்சா தயாரிக்கும் முறை

எளிய முறையில் சல்சா தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தக்காளி – 4,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
குடமிளகாய் – பாதி அளவு,
எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை-:

தக்காளியின் உள்பகுதியை விதையுடன் எடுத்து மிக்ஸியில் போடவும். சதைப் பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். விதைப்பகுதியை அரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்க்கவும்.

பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பிறகு, சிப்ஸ் உடன் பரிமாறவும்.