நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்? அதுவும் இவ்ளோ எளிமையாகவா!

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார். இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஒரு கிசுகிசு கிளம்பியுள்ளது.

இதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மிக எளிமையாக ஒரு கோவிலில் தங்கள் திருமணத்தை நடத்தவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

அந்த தகவல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது, உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.