சொட்டை தலையிலும் முடிவளரும் ஆச்சர்யம் நம் முன்னோர்கள் செய்த இந்த டெக்னிக்கை முயற்சி செய்யுங்க

சொட்டை தலையிலும் முடிவளரும் ஆச்சர்யம் நம் முன்னோர்கள் செய்த இந்த டெக்னிக்கை முயற்சி செய்யுங்க

கல்லும், மண்ணும் தோன்றும் முன்பே தோன்றிய மூத்தகுடியே தமிழ்க்குடி என தமிழர்களின் பாரம்பர்யத்தை சிலாகித்துப் போய் இலக்கியவாதிகள் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நம் தமிழ் முன்னோர்களிடம் சில நம்பிக்கைகள் புழக்கத்தில் இருக்கும். அதன் பின்னால் பல ஆச்சர்யங்கள் பொதிந்து இருக்கும்.

அதில் ஒன்று, விரல் நகங்களை ஒன்றோடு ஒன்றை தேய்ப்பது அடர்த்தியான, நீளமான மற்றும் உறுதியான முடியை வழங்கும். இது நிஜமா என்ன? இப்படிச் செய்வது நல நன்மைகளைத்தரும் என ஆதாரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. இப்படிச் செய்தால் சொட்டை விழுந்த இடத்தில் கூட முடி வளர்கிறதாம். இது ஒருவகை உடற்பயிற்சி என்றும், அதிர்ஸ்டத்தின் அடையாளம் எனவும் பார்க்கப்படுகிறது.

இப்படிச் செய்தால் எப்படி முடி வளரும்? யோகா நிபுணர்களோ விரல்களை ஒன்றுடன், ஒன்று தேய்க்கும்போது அதனால் உருவாகும் ஆற்றல் நமது உடலின் சக்கரங்களை சரி செய்து, ஆற்றல் சமநிலையின்மையை போகச் செய்கிறது. இதனை அறிவியலில் பிரதிபலிக்கும் ஆற்றல்முறை என்று சொல்வார்கள்.

முடிவளர்ச்சி அதிகரிக்குமா?

சரியான பிரிதிபலிக்கும் புள்ளியை தூண்டுகையில் தீர்க்க ரேகை ஆற்றல் உடலின் இயக்கப்பாதைகள் மூலம் உடலின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும்.

இவற்றினால் அந்த, அந்த இடங்களில் ஆற்றல் அதிகரிக்கும். விரல்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பது உச்சந்தலையில் தூண்டுதலை ஏற்படுத்தும். இதன் காரணமாக முடிவளர்ச்சியும் அதிகரிக்கும். அப்புறமென்ன இழந்துபோன உங்கள் இளமையும் திரும்பப் பெறலாம்