எளிய முறையில் வெள்ளை ஆப்பம் தயாரிக்கும் முறை

எளிய முறையில் வெள்ளை ஆப்பம் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

அரிசி அரை கிலோ,
தேங்காய்த்துருவல் 20 கிராம்,
வெல்லம் சிறிய துண்டு,
தண்ணீர், உப்பு தேவையான அளவு,
தேங்காய் ஒன்று


செய்முறை:

அரிசியில், தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தேங்காய்த்துருவல்,வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக ஆட்டவும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்பம் செய்யவும். தேங்காய்ப்பால், பால் சேர்த்து சாப்பிடலாம்.

பலன்கள்: கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு. பசி இருக்கும்போது சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பசும்பாலை ஆப்பத்தில் ஊற்றி சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.