எளிய முறையில் வெஜிடபிள் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை

எளிய முறையில் வெஜிடபிள் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு 200 கிராம்,
கேரட் 100 கிராம்,
இஞ்சி சிறிய துண்டு,
பச்சை மிளகாய் 1,
பீன்ஸ், காலிஃபிளவர் தலா 100 கிராம்,
சீரகம், கடலைப் பருப்பு 10 கிராம்,
உப்பு, கடலை எண்ணெய், சூடான தண்ணீர் தேவையான அளவு


செய்முறை:

மாவுடன் எண்ணெய், உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கிளறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து, நான்கு நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், கடலைப் பருப்பு, உப்பு போட்டு மீண்டும் வதக்கி, ஆறவைக்கவும். கொழுக்கட்டை மாவு தயார் செய்த பிறகு, வெஜிடபிள் மசாலாவை, மாவுக்குள் வைத்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்கவும். இதை, குக்கரிலோ, இட்லி பாத்திரத்திலோ ஆவியில் வேகவைத்து, சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்: மாவுச்சத்து, நார்ச்சத்து இதில் உள்ளது. கேரட் சேர்க்கப்படுவதால் பீட்டாகரோட்டின் உடலுக்குக் கிடைக்கும். கூடவே, வைட்டமின் ஏ சத்தும் உடலுக்குக் கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமே ஏற்ற கொழுக்கட்டை இது.