எளிய முறையில் வாழைப்பூ துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் வாழைப்பூ துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு கப்,
மோர் கலந்த நீர் தேவையான அளவு,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்- 4,
புளி சிறு நெல்லிக்காய் அளவு,
தேங்காய்த் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு,
கடுகு அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு தேவையான அளவு.


செய்முறை:

ஆய்ந்த வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்நிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் வாழைப்பூவை சேர்த்து சுருள வதக்கி, பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையுடன், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்கவும்.

பலன்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், சிறுநீரக கல் கரையவும் உதவும்.