எளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை

எளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

முற்றாத முருங்கைக்கீரை (ஆய்ந்தது) – 2 கப்,
கடலைப்பருப்பு அரை கப்,
காய்ந்த மிளகாய் -2,
கடுகு, பெருஞ்சீரகம் தலா கால் டீஸ்பூன்,
பூண்டு – 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்),
எண்ணெய், உப்பு தேவையான அளவு,


செய்முறை:

கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து… மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். அத்துடன் ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்த்து நன்கு கிளறி எடுத்து, சுடச் சுட பரிமாறவும்.

பலன்:உடலில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். ரத்தசோகை குணமாகும்