எளிய முறையில் மசாலா கார்ன் தயாரிக்கும் முறை

எளிய முறையில் மசாலா கார்ன் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

வேகவைத்த சோளம் 1,
உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு,
வெங்காயம், தக்காளி தலா 1,
சின்ன குடமிளகாய், பச்சை மிளகாய் தலா 1,
கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு சிறிதளவு.


செய்முறை:

வேகவைத்த சோளத்தை நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், குடமிளகாய், சிறிய பச்சை மிளகாய்த் துண்டு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கிளறவும். கடைசியாகக் கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:

வைட்டமின் சி, மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவு இது. பீட்டாகரோட்டின் இருப்பதால் கண்களுக்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. மாலை வேளையில் கார்ன் மசாலா சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோயாளிகள் அளவோடு சாப்பிடவேண்டும்.