எளிய முறையில் பாகற்காய் பொட்டுக்கடலை பொரியல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் பாகற்காய் பொட்டுக்கடலை பொரியல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

பாகற்காய் ஒன்று,
மோர் கலந்த நீர் தேவையான அளவு,
பொட்டுக்கடலை கால் கப்,
காய்ந்த மிளகாய்- 3,
பூண்டு – 4 பல்,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் ஒன்று,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பாகற்காயை பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, மோரில் ஊறவைத்த பாகற்காயை எடுத்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பாகற்காய் பாதி வெந்தவுடன், அரைத்த பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகக் கிளறி பொன்நிறமாக எடுக்கவும்.

பலன்: இமை முடி நன்கு வளரவும், தேமல் மறையவும் உதவும்.