எளிய முறையில் பழக்கலவை இலை அடை தயாரிக்கும் முறை

எளிய முறையில் பழக்கலவை இலை அடை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கோதுமை மாவு 300 கிராம்,
தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள். ஆப்பிள், பப்பாளிப் பழம், மாதுளை பழம் தலா 1,
உப்பு, தண்ணீர் தேவையான அளவு


செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும். இதனுடன் வெல்லம்,தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து, இலையில் இருக்கும் சப்பாத்தி மாவில் வைத்து, இலையை இரண்டாக மூடி வேகவைத்து இறக்கவும்.

பலன்கள்: அனைவரும் சாப்பிட ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் வெல்லம், தேங்காய்த்துருவலைத் தவிர்த்து, பழங்கள் மட்டும் வைத்து சாப்பிடவும். மாலை நேரத்தில் செய்து சாப்பிட ஏற்ற உணவு இது. அனைவருக்கும் நன்றாக எனர்ஜி தரக்கூடிய ரெசிப்பி இது.