எளிய முறையில் நேந்திரம் இலை அடை தயாரிக்கும் முறை

எளிய முறையில் நேந்திரம் இலை அடை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கோதுமை மாவு 300 கிராம்,
நேந்திரம் பழம் 1,
தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
உப்பு, தண்ணீர் தேவையான அளவு


செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். நேந்திரம் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறிவிடவும். பிறகு இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலையை சரிபாதியாகப் பிரித்து, அரை வட்ட வடிவில் மூடவும். குக்கரில் இலை அடையை வேக வைத்து சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்:

வாழை இலையில் உள்ள சத்துக்கள் உள்ளே இருக்கும் சப்பாத்தி மாவில் இறங்கிவிடும். இதனால் நார்ச்சத்து, மாவுச்சத்து, தாது உப்புகள் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்க இதைச் சாப்பிடலாம், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.