எளிய முறையில் நிலக்கடலை இலை அடை தயாரிக்கும் முறை

எளிய முறையில் நிலக்கடலை இலை அடை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கோதுமை மாவு சப்பாத்திக்குத் தேவையானஅளவு,
வறுத்த நிலக்கடலை 20 கிராம்,
வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சிறிதளவு.


செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாக தட்டிக்கொள்ளவும். நிலக்கடலையுடன் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறிவிடவும். பிறகு, இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல், பூரணத்தை வைத்து, இலை அடையை இரண்டாக மடித்து வேகவைத்து இறக்கவும்.

பலன்கள்: புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவு இது, விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடல் பருமனாக இருப்பவர்கள் அளவுடன் சாப்பிட வேண்டும்.