எளிய முறையில் தக்காளி இட்லி தயாரிக்கும் முறை

எளிய முறையில் தக்காளி இட்லி தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

இட்லி 3,
தக்காளி 1,
வெல்லப்பாகு சிறிதளவு,
நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,
நறுக்கிய இஞ்சித் துண்டுகள் சிறிதளவு,
நறுக்கிய பூண்டு துண்டுகள் சிறிதளவு,
இஞ்சிப் பூண்டு பேஸ்ட் சிறிதளவு,
கொத்தமல்லி இலை சிறிதளவு,
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளித் துண்டுகளை சேர்த்து மீண்டும் வதக்கி, நன்றாக மசாலா போல தயார் செய்யவும். இதில் சிறிதளவு வெல்லப்பாகை சேர்க்கவும். இட்லி துண்டுகள் சேர்த்துக் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

பலன்கள்:

வளரும் குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவு இது. காலை மற்றும் மதிய இடைவேளை நேரங்களில் சாப்பிட ஏற்றது. சிறுநீரக நோயாளிகள் இந்த உணவைத் தவிர்ப்பது நல்லது.