எளிய முறையில் சீரளம் இட்லி தயாரிக்கும் முறை

எளிய முறையில் சீரளம் இட்லி தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

நன்றாக வேகவைத்த மினி இட்லி 15,
நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டு 1,
நல்லெண்ணெய் சிறிதளவு,
சிறிதாக நறுக்கிய இஞ்சி, சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து 30 கிராம்.


செய்முறை:

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும். கடைசியாக சிறு இட்லிகளை நன்றாக உதிர்த்து, மசாலாவுடன் சேர்த்துக் கிளறி, இட்லி உப்புமா போல செய்து, அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி, சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

பலன்கள்:

மிகச் சிறந்த காலை உணவு இது. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, நார்ச்சத்து, தாது உப்புக்களும் இந்த உணவில் இருக்கின்றன. நன்றாகப் பசியை தூண்டக்கூடியது.