எளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை

எளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கோதுமை மாவு 300 கிராம்,
சிவப்பு அவல் 10 கிராம்,
தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
உப்பு, தண்ணீர் தேவையான அளவு


செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். சிவப்பு அவலுடன் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைக் கலந்து கிளறிவிடவும். பிறகு இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலை அடையாக செய்து இரண்டாக மடித்து வேகவைத்து இறக்கவும்.

பலன்கள்: சிவப்பு அவலில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், வயதானவர்கள் என எல்லோருக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள் வெல்லம், தேங்காயை நீக்கிவிட்டு அவல் மட்டும் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்தில் சாப்பிட ஏற்ற உணவு. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.