எளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை

எளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

ரவை 150 கிராம்,
தண்ணீர், சீரகத்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், கேரட், கொண்டைக்கடலை 50 கிராம்,
வெங்காயம் சிறிதளவு,
தக்காளி 2,
வறுத்த தேங்காய்த்துருவல் 100 கிராம்,
மஞ்சள்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு


செய்முறை:

கம்பை நன்றாக அரைத்து, உப்பு,தேங்காய் சேர்த்துப் புட்டாகத் தயாரிக்கவும். கடலைக்கறி தயாரிக்க, நன்றாகத் தண்ணீரில் ஊறிய கொண்டைக் கடலையுடன், தக்காளி, தேங்காய் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு இறக்கவும். சூடான கடலைக் கறியுடன் கம்புப் புட்டு சேர்த்து சாப்பிடவும்.

பலன்கள்:

கம்புப் புட்டு கடலைக் கறியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். தினமும் காலை உணவாக அனைவருமே கம்புப் புட்டு செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.