எளிய முறையில் இனிப்புக் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை

எளிய முறையில் இனிப்புக் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி மாவு 200 கிராம்,
உப்பு, கடலை எண்ணெய் தேவையான அளவு,
கொதிக்கவைத்த தண்ணீர்,
தேங்காய்த் துருவல் சிறிதளவு,
வெல்லம் இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய் 2.


செய்முறை:

அரிசி மாவுடன் எண்ணெய், உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கிளறி கொழுக்கட்டை மாவாக்கவும். தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் துண்டு ஆகியவற்றை சேர்த்து பூரணமாக செய்யவும். பிறகு கொழுக்கட்டை மாவில் பூரணத்தை வைத்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

பலன்கள்: உடனடி எனர்ஜி தரக்கூடிய ஹெல்த்தி ரெசிப்பி. இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு, குண்டாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.