எளிய முறையில் இஞ்சி ரசம் தயாரிக்கும் முறை

எளிய முறையில் இஞ்சி ரசம் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

இஞ்சி – 3 இன்ச் நீள துண்டு,
தக்காளி – 3 (விழுதாக அரைக்கவும்),
புளிக்கரைசல் அரை கப்,
வேகவைத்த துவரம்பருப்பு கால் கப்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு,
கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்,
எண்ணெய் சிறிதளவு,
ரசப்பொடி, உப்பு தேவையான அளவு.


செய்முறை:

இஞ்சியை நன்கு தோல் சீவி அரைத்து வடிகட்டி, சாற்றை தனியாக வைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி விழுது, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து, பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இஞ்சிச் சாறு, ரசப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பலன்: உடல் பொலிவு பெறும். ஜீரணத்துக்கு உதவும். வயிற்றுப் பொருமல் தீரும்.