எளிய முறையில் அவல் வடாம் தயாரிக்கும் முறை

எளிய முறையில் அவல் வடாம் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

அவல் – கால் கிலோ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 5 (விழுதாக அரைக்கவும்),
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
துருவிய வெள்ளைப் பூசணி – அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

அவலை நன்றாக மண் போக அலசி, சுடுநீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து, அதனுடன் துருவிய பூசணி, பச்சை மிளகாய் விழுது, ஓமம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை இதில் போட்டுப் பிசையவும். இந்த மாவை கையால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்டில் பக்கோடா மாதிரி கிள்ளிக் கிள்ளி வைத்து, வெயிலில் 2 நாட்கள் காயவிட்டு எடுத்து வைக்கவும்.

இதை சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.