எளிய முறையில் வெற்றிலை பூண்டுத் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் வெற்றிலை பூண்டுத் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

கும்பகோணம் கார / கறுப்பு வெற்றிலை – 10,
துவரம் பருப்பு – 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – கோலி அளவு,
உப்பு, மஞ்சள் தூள், சீரகம் – சிறிதளவு.

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – சிட்டிகை.


செய்முறை:

வெற்றிலையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் துவரம் பருப்பு, மிளகாய், சீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுத்து, வெற்றிலையைச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும். கஞ்சியுடன் இந்தத் துவையல் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பலன்கள்:

வெற்றிலை நல்ல செரிமானத்தைத் தரக்கூடியது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், அயோடின், பொட்டாசியம், நார்ச்சத்து இதில் அதிகம். வயிற்றுப் புண்களை ஆற்றும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை வராது. எலும்புகள் வலுப்பெறும்.