எளிய முறையில் நெல்லித் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் நெல்லித் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

பெரிய நெல்லிக்காய் – 10 (வேகவைத்து கொட்டை நீக்கவும்),
காய்ந்த மிளகாய் – 5,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் – சிறிதளவு.


செய்முறை:

கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, இதனுடன், உப்பு, வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து அரைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதில் வைட்டமின் சி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை குறையும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.