எளிய முறையில் தேங்காய் மாங்காய்த் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் தேங்காய் மாங்காய்த் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

துருவிய கிளி மூக்கு மாங்காய், துருவிய தேங்காய் – தலா ஒரு கப்,
பச்சைமிளகாய் – 6,
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உடைத்த உளுந்து – அரை டீஸ்பூன்.


செய்முறை:

மாங்காய், தேங்காய், உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள் தூளை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளன. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள், இந்தத் துவையலை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சோர்வை நீக்கும். நிறைய நீர்ச்சத்து இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகும்.