எளிய முறையில் தேங்காய் சிவப்புத் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் தேங்காய் சிவப்புத் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

முற்றிய தேங்காய் (துருவிக்கொள்ளவும்) – அரை மூடி,
காய்ந்த மிளகாய் – 6,
பூண்டுப்பல் – 2,
உப்பு – சிறிதளவு.

தாளிக்க:

எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு.


செய்முறை:

தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

பலன்கள்:

தேங்காயில் புரதம் கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. வாயுத் தொடர்பான பிரச்னைகள் வராது. வயிற்றுப்புண்னைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.