எளிய முறையில் டோர்ட்டில்லா தயாரிக்கும் முறை

எளிய முறையில் டோர்ட்டில்லா தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

மைதா மாவு – முக்கால் கப்,
கோதுமை மாவு – கால் கப்,
பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளக் கட்டையால் மெலிதாக தேய்த்து… சூடான தோசைக்கல்லில் போட்டு (எண்ணெய் விடாமல்) இருபுறமும் சுட்டு எடுக்கவும்.