எளிய முறையில் சேனைத் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் சேனைத் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தோல் நீக்கித் துருவிய மலபார் சேனை (சிவப்பாக இருக்கும்) – ஒரு கப்,
உடைத்த உளுந்து – 4 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 10,
பெருங்காயம் – சிறிய கட்டி,
புளி – பெரிய நெல்லி அளவு,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், துருவிய சேனை சேர்த்து நன்றாக வதக்கி, மிதமான தீயில் வேகவிடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுத்து, ஆறியதும், சேனை, வறுத்த உளுந்து, உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது எண்ணெயில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, ஐந்து முதல் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறி எடுக்கவும்.

பலன்கள்:

சேனையில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.