எளிய முறையில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

பெரிய கத்திரிக்காய் – 1,
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்,
உப்பு, தக்காளி – 2,
காய்ந்த மிளகாய் – 6.

தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 2,
பருப்பு – அரை டீஸ்பூன்.


செய்முறை:

கத்திரிக்காயில் எண்ணெய் தடவி, ஆங்காங்கே துளைசெய்து (இல்லாவிட்டால் வெடித்துப் பிளந்துவிடும்) தோல் கருகும் வரை அடுப்பில் சுட வேண்டும். பிறகு, தோலை நீக்கி, மசித்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து, கடைசியாகத் தக்காளியை நறுக்கிப் போட்டு, வதக்கி ஆறவிட வேண்டும். உப்பு, மசித்த கத்தரிக்காய் சேர்த்து, மிக்ஸியில் ஒருமுறை சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்பு: பெரிய கத்தரிக்காய் கிடைக்காவிட்டால், சிறிய கத்தரிக்காயைப் பயன்படுத்தலாம்.

பலன்கள்:

கெட்ட கொழுப்பைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. வயிறு நிரம்பிய உணர்வு மேலிடும். இரும்பு, புரதம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அனைவரும் சாப்பிடலாம். கத்திரிக்காய் அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.