எளிய முறையில் கொய்யா துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் கொய்யா துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது),
பச்சை மிளகாய் – தலா 4,
கொத்தமல்லி – சிறிதளவு,
எலுமிச்சை – 1,
தேங்காய் (துருவிக்கொள்ளவும்) – கால் மூடி,
உப்பு சிறிதளவு.

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் – சிறிதளவு,
வெந்தயம் – கால் டீஸ்பூன்.


செய்முறை:

கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பலன்கள்:

அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. கொத்தமல்லி சேர்ப்பதால், உடலின் நச்சுக்களை நீக்கும். எலுமிச்சைச் சாறு சேர்ப்பதன் மூலம், வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.