எளிய முறையில் இஞ்சித் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் இஞ்சித் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தோல் நீக்கித் துருவிய இளசான இஞ்சி, வெல்லம் – தலா 100 கிராம்,
உப்பு, புளி – தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் – சிறிதளவு,
கடுகு, பெருங்காயம் – சிறிதளவு.


செய்முறை:

இஞ்சித் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

இஞ்சி, கொழுப்பு, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், எலும்புகள் நன்றாக வலுப்பெற உதவும். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு, இந்தத் துவையல் மிகவும் நல்லது.