எளிய முறையில் ஆரஞ்சு தோல் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் ஆரஞ்சு தோல் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

ஆரஞ்சுப் பழத்தின் தோல் நறுக்கியது – கால் கப்,
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிய கட்டி,
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிது,
புளி – கோலி குண்டு அளவு,
காய்ந்த மிளகாய் – 6 அல்லது 8.


செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பழத் தோலைப் போட்டு வதக்கி, தனியே வைக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்‌ஸியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து, அரைக்க வேண்டும். தோசை, பிரெட், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்:

பொட்டாசியம், வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்களுக்கு நல்லது. கால்சியம் சத்து இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். உடல் குளிர்ச்சியடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் என்பதால், ரத்தசோகை வருவதைத் தடுக்கும்.