ஸ்பெய்னில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது என வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக 11 லட்சத்து 33 ஆயிரத்து 452 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் கேந்திர நிலையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 2 லட்சத்து 77 ஆயிரத்து 807 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 736 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 537 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக ஸ்பெய்னில் 11 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 546 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.ஸ்பெய்னுக்கு அடுத்ததாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 827 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 14 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெய்ன் மற்றும் இத்தாலிக்கு அடுத்ததாக ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு 82 ஆயிரத்து 165 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 6 ஆயிரத்து 507 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர ஜேர்மனியில் 91 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த முக்கிய ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் 38 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 605 பேர் உயிரிழந்துள்ளன்.

சுவிஸர்லாந்தில் 20 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 620 பேர் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியத்தில் 18 ஆயிரத்து 431 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு ஆயிரத்து 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெதர்லாந்தில் 16 ஆயிரத்து 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அங்கு ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் 12 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவில் 81 ஆயிரத்து 639 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்றைய தினம் 19 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் இன்றைய தினம் இறந்த 4 பேருடன் சேர்த்து சீனாவில மொத்தமாக 3 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக ஈரானில் 55 ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 3 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினத்தில் மாத்திரம் அங்கு 158 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் தற்போதைய நிலவரத்தின்படி கொரோனா வைரஸ் காரணமாக 11 லட்சத்து 33 ஆயிரத்து 452 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 60 ஆயிரத்து 378 பேர் மரணடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிய 11 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 999 பேர் குணமடைந்துள்ளனர்.