எச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்றா அதுபற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்ன

எச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்றா அதுபற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்ன

இந்தியாவில் ஒருவருக்கு எச்.ஐ.வி (ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (அக்யூர்ட் இம்யூனோ டிஃப்சியன்சி ஸிண்ட்ரோம்) நோய் இருப்பது தெரிந்தால், இந்த சமூகம் அவரை நடத்தும் விதம் கொடூரமானதாக இருக்கிறது. இது ‘மோசமான’ நோய் என்றும், அது உள்ள எவருக்கும் வாழ்க்கை இல்லை என முற்றுப்புள்ளி குத்திவிடுகின்றனர். இதனால் மக்கள் இந்த நோயைப் பற்றிய தவறான புரிதல்களால், பல வதந்திகளை நம்ப தொடங்கிவிடுகின்றனர்.

சரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுவதை கட்டுபடுத்த முடியும். 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட UNAIDS ஆராய்ச்சியின் படி, புதிய எச்.ஐ.வி நோய்கள் 46% குறைந்துள்ளன, எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இந்தியாவில் 2010 முதல் 22% குறைந்துள்ளன. ஆண்டுக்காண்டு இந்த விகிதம் குறைந்து கொண்டே வருவது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். எய்ட்ஸ் பற்றி பொதுவாகக் பரப்பப்படும் சில கட்டுக்கதைகளின் உண்மை நிலையை பற்றி இனியாவது தெளிவாகப் புரிந்து கொள்வோம். எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி இரண்டும் ஒன்று தான் என்ற தவறான புரிதல் படிக்காதவர்கள், படித்தவர்கள் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.

இந்த புரிதலே மிகவும் தவறான விஷயம். இது நம்முடைய பாடத்திட்டத்தில் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கத் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மக்களுக்கு இருந்த அச்சத்தின் காரணமாக அது பற்றிய ஏராளமான வதந்திகள் பரவத் தொடங்கி உலவ விட்டுவிட்டார்கள்.

​கட்டுக்கதை 1:

எச்.ஐ.வி பாதித்த நபர்களுடன் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கும் எச்.ஐ.வி வந்துவிடுமா?

எச்.ஐ.வி பற்றி மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால், தொடுதல், வியர்வை அல்லது உமிழ்நீர் வழியாக இது பரவும் என்பது தான்.

கீழே கூறிப்பிடப்பட்ட எந்த வழியிலும் எச்.ஐ.வி பரவாது என்று ஆராய்ச்சி கூறுகிறது:

எச்.ஐ.வி பாதித்த நபர் தங்கியிருக்கும் பகுதியில் தங்குவது

எச்.ஐ.வி பாதித்த நபர் தொட்ட எந்த பொருளையும் தொடுவது

ஒரே தண்ணீர் பாட்டிலில் குடிப்பது

எச்.ஐ.வி பாதித்த நபருடன் கை குலுக்குவது அல்லது கட்டிப்பிடிப்பது

அவர்களுடன் ஒரே பாத்திரங்களைப் பகிர்வது

​கட்டுக்கதை 2:

எச்.ஐ.வி நோயை தடுப்பதற்கான ஒரே வழி ஆணுறைகள் பயன்படுத்துவது தான்

பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்கள் பாதுகாப்பற்ற உடலுறவு முறைகளால் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கு பல வழிகள் உள்ளன. எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.டி.களைத் தடுப்பதற்கான வழிகளில் ஆணுறை பயன்படுத்துவதும் ஒன்று தான் என்றாலும், எச்.ஐ.வி.யைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி இதுவல்ல. யாராவது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகளோடும் ஆபத்திலும் இருந்தால், அவர் ப்ரீ-எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PrEP) மருந்துகளை எடுப்பது நல்லது. போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) என்பது மற்றொரு அவசரகால மருந்தாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது பிற பாதிப்புகளுக்குப் பிறகு எடுக்க வேண்டும். இந்த மருந்தை உடனேயே உட்கொள்ள வேண்டும், அதை 28 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

​கட்டுக்கதை 3:

ஒருவரை பார்த்தே அவருக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் சொல்லலாம்

ஒரு நபரை வெறுமனே பாரத்து அவருக்கு எச்.ஐ.வி + அல்லது எய்ட்ஸ் உள்ளதா என்பதைப் சொல்ல முடியாது. எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ்க்கான அறிகுறிகள் பல ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் கூட போகலாம், ஏனெனில் இந்த அறிகுறிகள் பொதுவான நோய்கள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவருக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என்பதை அறிய ஒரே வழி பரிசோதனையை மேற்கொள்வதுதான்.

ஒருவர் திடீரென மிகவும் உடல் மெலிந்து பார்க்கவே பாவமாகத் தென்படுவார். அவருடைய உடல் அப்படி பலவீனப்படுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லோரும் சொல்வதென்ன? பார்க்கவே பாவமா இருக்கார். பாரேன் ஏதோ எய்ட்ஸ் வந்த மாதிரி இருக்கார் என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துவிடுவார்கள் எய்ட்ஸ் அல்லது எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை ஆளை பார்த்தே கண்டுபிடித்துவிடவெல்லாம் முடியாது.

​கட்டுக்கதை 4:

எச்.ஐ.வி பாதித்தவர்கள் அந்த பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற முடியாது

எச்.ஐ.வி கண்டறியப்பட்ட ஒரு பெண், குழந்தைகள் பெற்று கொள்ளலாம். குழந்தைக்கு இந்த வைரஸ் பரவும் அபாயங்கள் இருக்கின்றன தான், ஆனாலும் சரியான சிகிச்சையைத் தொடங்கினால், குழந்தைக்கு தாயிடமிருந்து எச்.ஐ.வி வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். எச்.ஐ.வி பாதித்த தாய் தனது கர்ப்பம் முழுவதும் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகும் 4-6 வாரங்கள் வரை தொடர்ந்து மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலம், குழந்தைக்கு எச்.ஐ.வி வரும் அபாயத்தை குறைக்க முடியும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பரிசோதனைகளின் மூலம் எச்ஐவி கண்டறியப்பட்டால் உடனே, அதற்குரிய தக்க மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதேபோல் குழந்தை பிறந்த பின் பாலூட்டுவது தவிர்க்கப்படுதல் நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி தாய் மருநு்துகளை எடுத்துக் கொண்டால், அந்த எச்ஐவி பாதிப்பு குழந்தைக்கு பரவாமல் மிக எளிதாகத் தடுக்க முடியும்.

எச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்று

எச்.ஐ.வி என்பது ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸையும், எய்ட்ஸ் என்பது அக்யூர்ட் இம்யூனோடிஃப்சியன்சி ஸிண்ட்ரோம் நோயையும் குறிக்கிறது. எச்.ஐ.வி வைரஸ் தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம் என்றாலும், இரண்டுமே ஒன்று தான் என்று அர்த்தமல்ல. எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார். இது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மோசமடைய செய்துவிடும். முன்கூட்டியே கண்டறிவதன் மூலமும் மற்றும் உரிய மருந்துகள் மூலமும், எய்ட்ஸ் அபாயத்தை குறைக்க முடியும்.

மற்ற சில வைரஸ்கள் நம்முடைய உடலைத் தாக்குகின்ற பொழுது, அது எப்படி நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி, நம்மை பலவீனப்படுத்துகிறதோ அதுபோலத் தான் இதுவும். அப்படி அந்த குறிப்பிட்ட வைரஸால் பாதிக்கப்படுகிற நபரின் நோயெதிர்ப்பு ஆற்றல் படிப்படியாகக் குறைந்து அது எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கச் செய்கிறது என்று தான் அர்த்தம்.