ஹேன்டா வைரஸ் திடீரென எப்படி பரவியது அதுபற்றிய உண்மை என்ன

ஹேன்டா வைரஸ் திடீரென எப்படி பரவியது அதுபற்றிய உண்மை என்ன

எலிகளில் இருந்து பரவும் இந்த ஹேன்டா வைரஸ்கள் மனிதர்களுக்கு மருத்துவ தீவிரத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த ஹேன்டா வைரஸ்கள் மனிதர்களுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டு பண்ண காரணமாகிறது. பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர் வழியாக இது பரவுகிறது. இந்த ஹேன்டா வைரஸ் நோய்த்தொற்றுக்கு பிறகு நீங்கள் சிறுநீரக நோய்க்குறி (எச்.எஃப்.ஆர்.எஸ்) மற்றும் ரத்தக்கசிவு காய்ச்சல் இவற்றை சியோல் என்ற ஹேன்டா வைரஸூம் பூமலா மற்றும் டோப்ராவா வைரஸ்களால் நெஃப்ரோபதியா எபிடெமிகா என்ற பாதிப்பும், ஹேன்டா இரத்தக் கசிவு காய்ச்சல் போன்றவையும் உண்டாகிறது. ஆன்டஸ் வைரஸ்கள் மற்றும் சின் நாம்ரே வைரஸ் கார்டியோபல்மனரி சின்ட்ரோம் என்ற பாதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த நோய்க்கு என்று தனிப்பட்ட சிகிச்சை எதுவுமில்லை. மக்கள் எலிகளிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள் .

​ஹேன்டா வைரஸ் எப்படி உருவாகிறது

ஹேன்டா வைரஸ்யில் பல்லாயிரக்கணக்கான இனங்கள் இருக்கின்றன. இவை மரபணுக்கள் கொண்ட மிகச் சிறிய வைரஸ். ஐரோப்பாவில் இதுவரை 6 வித்தியாசமான ஹேன்டா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஹேன்டா வைரஸ்களும் ஒரு குறிப்பிட்ட இன எலிகளால் பரப்பி விடப்படுகிறது. ஐரோப்பாவில் இந்த ஹேன்டா வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருகிறது. பொதுவாக இங்கே ஏற்படும் பாதிப்பு பூமலா என்ற ஹோன்டா வைரஸால் உண்டாகிறது. இந்த வைரஸ் பேங் வால் (மியோட்ஸ் கிளாரியோலஸ்) என்ற எலிகளின் மூலம் பரவி வருகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்தை தவிர மத்திய தரைக்கடல் பகுதிகள், வடக்குப் பகுதிகள் போன்ற பகுதிகளில் ஏராளமாக பரவி வருகிறது.

மஞ்சள் கழுத்து எலிகளின் மூலமாக (அப்போடெமஸ் ஃபிளாவிகோலிஸ்) டோப்ராவா என்ற ஹேன்டா வைரஸ் பரவுகிறது. இந்த எலிகள் தென்கிழக்கு ஐரேப்பாவில் மட்டும் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த ஹேன்டா வைரஸ்கள் அதிகமாக பரவக் கூடியதாக இருக்கிறது .

​வைரஸ்க்கான மருத்துவ அம்சங்கள்

ஹேன்டா வைரஸால் கீழ்க்கண்ட நோய் அறிகுறிகள் தென்படுகின்றன.

சிறுநீரக நோய்க்குறி (எச்.எஃப்.ஆர்.எஸ்) உடன் ரத்தக்கசிவு காய்ச்சல், முக்கியமாக ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் பரவுகிறது.

நெஃப்ரோபதியா எபிடெமிகா மற்றும் மைல்டு HFRS பூமலா வைரஸால் ஐரோப்பிய நாடுகளில் உண்டாகிறது.

அமெரிக்காவில் ஹேன்டா வைரஸ் கார்டியோபல்மனரி நோய்க்குறிகள் உண்டாகின்றன.

ஹேன்டா வைரஸ் மருத்துவ அம்சங்கள் நோய்க்கு தகுந்த மாதிரி வேறுபடுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நபரை இன்குபேட்டரில் 2-3 வாரங்கள் முதல் 6 வாரங்கள் வரை வைக்க வேண்டியிருக்கும். காய்ச்சல், த்ரோம்போசைட்டோபீனியா, தலைவலி, சுவாசக் குழாய் அறிகுறிகள், வயிற்று மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் தீவிரமாகும்.

பூமலா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 0.1 முதல் 0.4% வரை இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாலியூரியா போன்ற சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்கி நோயின் தீவிரத்தை மேம்படுத்துகிறது. குளோமெருலோனெப்ரிடிஸ், குய்லின்-பார் நோய்க்குறி, ஹைப்போபிட்யூட்டரிஸம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடங்குகிறது.

இதுவே டோப்ராவா வைரஸ் என்றால் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி இறப்பு விகிதத்தை அதிகரிக்கிறது.

​பரவும் விதம்

பேங் வால்ஸ் மற்றும் மஞ்சள் கழுத்து எலிகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் ஹேன்டா வைரஸ் பரவுகிறது. எலிகளின் பெருக்கம் அதிகமாகும் இந்த நிலை தீவிரமாகிறது. ஓக் மற்றும் பீச் போன்ற தாவரங்களின் விதைகளை உண்ணும் எலிகள் இங்கு ஏராளமாக உள்ளன. எனவே இந்த எலிகள் இலையுதிர் காலத்தில் மனித குடியிருப்புகளை ஆக்கிரமித்து ஏராளமான ஹேன்டா வைரஸ் நோய்களை பரப்பி வருகிறது. இந்த ஆண்டுகளில் உச்ச விகிதமாக இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும். பாதிக்கப்பட்ட எலி 5-6 நாட்களுக்கு வைரஸை பரப்பி விடுகிறது. இதனுடைய வெளியேற்றம் 2 மாதங்கள் வரைக் கூட நீடிக்கலாம்

​பரிமாற்றம் எப்படி நடக்கிறது?

எலிகளின் மலம், சிறுநீர் மற்றும் உமிழ் நீரை சுத்தப்படுத்தும் போது இந்த வைரஸ் பரவுகிறது. எனவே எலிகள் நிறைந்த தூசி படிந்த இடங்கள் நமக்கு ஆபத்து நிறைந்தவையாக மாறுகின்றனர். ஆனால் இந்த ஹேன்டா வைரஸ்கள் பெரும்பாலும் மனிதருக்கு மனிதர் பரவுவதில்லை.

யாருக்கு ஆபத்துக்கள் அதிகம் ?

காடுகளில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

​தடுப்பு நடவடிக்கைகள்

எலிகளின் அசுத்தம் உள்ள இடங்களை முதலில் தொடுவதை தவிருங்கள்

சுத்தம் செய்யும் போது மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

காட்டு எலிகளை ஆராய்ச்சிக்காகவும், செல்லப் பிராணிகளாக வீட்டிற்கு எடுத்துச் செல்வதையும் தவிருங்கள்.

பூமலா வைரஸ் இரண்டு வாரத்திற்கு மேல் வெளியே நீடித்து இருக்கும் சக்தி படைத்தது. எனவே பாதிக்கப்பட்ட எலியை நீங்கள் அகற்றிய பிறகும் கூட தொற்றுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

​நோயைக் கண்டறிதல்

ஹேன்டா வைரஸைக் கண்டறிய ஆன்டி பாடிகள் உருவாக்கத்தின் மூலம் கண்டறியப்படுகிறது. இம்யூனோ-ஃப்ளோரசன்ட் மதிப்பீடுகள் (ஐ.எஃப்.ஏ) அல்லது என்சைம் இம்யூனோ அஸ்ஸேஸ் மூலம் கண்டறிய முயற்சி செய்கின்றனர். IgG ஆன்டிபாடிகள் குறைவு இவற்றை . இம்யூனோ-ஃப்ளோரசன்ட் மதிப்பீடுகள் மூலம் பழைய செல்களை புதிய தொற்றுக்களில் இருந்து பிரித்து ஆராய்ச்சி செய்கின்றனர். தற்போது எல்லாம் இம்யூனோ-க்ரோமடோகிராஃபிக் போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் இரத்த பரிசோதனை மூலம் தொற்றை கண்டறிகின்றனர்.

​இதற்கான சிகிச்சைகள்

ஹேன்டா வைரஸ் நோயை சமாளிக்க நமது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சிறுநீர் குறைவாக கழிப்பவர்கள் அதாவது போதுமான நீர்ச்சத்து இல்லாதவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் எளிதாக உயிரிழப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. சில பேருக்கு சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயலைஸிஸ் தேவைப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய ஹேன்டா வைரஸ்கள் மனிதர்களுக்கு மனிதர் பரவுவதில்லை. இந்த ஹேன்டா வைரஸ் பாதிப்பிற்குரிய ஒரே மருந்து ரிபாவிரின் ஆகும். இதுவரை இதற்கு எந்த தடுப்பூசிகளும் கண்டறியப்படவில்லை.

கண்டறியப்படாத பகுதிகள்

ஐரேப்பாவின் பல பகுதிகளில் இந்த ஹேன்டா வைரஸ் கண்டறியப்படவில்லை. காணப்படும் இடங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழி நாம் வாழும் பகுதிகளில் எலிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே ஆகும்.