எளிய முறையில் நாட்டுக்கோழி வறுவல் தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247

எளிய முறையில் நாட்டுக்கோழி வறுவல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் நாட்டுக்கோழி வறுவல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

சுத்தம் செய்யப்பட்ட நாட்டுக்கோழி இறைச்சி 1 கிலோ
சின்ன வெங்காயம் ½ கிலோ
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
மஞ்சள்
உப்பு
நல்லெண்ணெய் 150 மில்லி

இவற்றை வறுத்துப் பொடியுங்கள்

காய்ந்த மிள்காய் 20
மிளகு 3 ஸ்பூன்

தாளிக்க

பட்டை
கிராம்பு
சோம்பு
கறிவேப்பிலை


எப்படிச் செய்வது-:

குக்கரை அடுப்பில் வைத்து,சூடானதும் எண்ணெய் விடுங்கள். அதில் வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது,தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்குங்கள்.அதன் பிறகு உப்பு,மஞ்சள் தூள்,கோழிக்கறி சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு 1 டம்ளர் நீர் விட்டு குக்கர் மூடியைப் போட்டு 5 விசில் வந்ததும் குக்கரை ஆஃப் செய்யுங்கள்.

குக்கரின் ஆவி அடங்கியதும், இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளியுங்கள் . அதில் குக்கரில் உள்ள கறியை எடுத்துக் கொட்டி அதில் உள்ள நீர் வற்றும் வரை கிளறிவிடுங்கள்.நீர் வற்றியதும், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும்,காய்ந்த மிளகாய், மிளகுத் தூளை தூவி சற்று நேரம் சுருள வதக்கி இறக்குங்கள்..அவ்வளவுதான்