எளிய முறையில் தேங்காய்ப்பால் சூப் தயாரிக்கும் முறை

எளிய முறையில் தேங்காய்ப்பால் சூப் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

ஓட்ஸ் – அரை கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் பால் – கால் கப்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்


எப்படிச் செய்வது-:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை, கேரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வறுத்த ஓட்ஸ், தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.