எளிய முறையில் கோகோ பர்ஃபி தயாரிக்கும் முறை

எளிய முறையில் கோகோ பர்ஃபி தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

முக்கிய பொருட்கள்
12 Numbers முழு கோதுமை பிஸ்கட்
3 தேக்கரண்டி சுண்டக்காய்ச்சிய பால்
3 தேக்கரண்டி கொக்கோ தூள்
பிரதான உணவு
5 கைப்பிடியளவு முந்திரி


செய்முறை-:

Step 1:
ஒரு மிக்ஸி ஜாரில் பிஸ்கெட்டுகளைப் போட்டு நைஸான பவுடரா அரைத்துக் கொள்ள வேண்டும்.
samayam tamil

Step 2:
ஒரு பௌலில் பொடி செஞ்ச பிஸ்கெட்டை போட்டு அதோடு கோகோ பவுடரை நல்லா கலந்துக்கோங்க. இப்போது அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
samayam tamil

Step 3:
ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதுல எண்ணெய் தடவிக்கோங்க. நல்லா பிசைஞ்சி வைச்சிருக்கிற மாவை எடுத்து சின்ன உருண்டைகளாக்கி சப்பாத்தி போல தேய்ச்சிக்கோங்க. இப்போ சப்பாத்தி ரெடியான உடனே ஒரு கட்டரை எடுத்து உங்களுக்கு விருப்பமான ஷேப்ல வெட்டிக்கோங்க.
samayam tamil

Step 4:
கட் பண்ணின பர்ஃபிகளை ஒரு பிளேட்டுக்கு மாற்றிப் பரிமாறுவதற்கு முன் அதன் மேலே முந்திரி பருப்புகளை தூவி அலங்கரிச்சு கொடுங்க. இப்ப நம்ம இன்ஸ்டன்ட் கோகோ பர்ஃபி ரெடி!