ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள் | Tamil Serial Today-247

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள்

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள்

முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் குறைவாக இருத்தல், குறுகிய கவனத்திறன் போன்ற பாதிப்புகள் கொண்டது `ஆட்டிசம்’ எனப்படுகிறது. இந்த ஆட்டிசம்தான் குழந்தைகளை அச்சுறுத்துகிறது.

முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெற்றோருக்கு என்ன வயதாக இருந்தாலும் அது பிரச்சினையில்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆட்டிசத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்களையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பு இடைவெளிக் குறைவால் ஏற்படும் பாதிப்பை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.

“நாங்கள் பல்வேறு கோணங்களில் அலசினாலும், இந்த உண்மையைப் புறக்கணிக்க இயலவில்லை” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நியார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான பீட்டர் பியர்மான் கூறுகிறார். அதேநேரத்தில், இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

முறையாகத் திட்டமிடாமையால் அமெரிக்காவில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது, 1995-ம் ஆண்டில் மொத்தக் குழந்தை பிறப்பில் 11 சதவீதமாக இருந்தது என்றால், 2002-ல் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.