20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்

20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்

நெஞ்சு சளி பிரச்சனைக்கு நாட்டு மருத்துவம்:-
Nattu maruthuvam – தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.

தலைவலி குணமாக நாட்டு மருத்துவம் :-
Nattu maruthuvam – 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக நாட்டு மருத்துவம் :-
Nattu maruthuvam – சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல் குணமாக நாட்டு மருத்துவம் :-
Nattu maruthuvam – நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும்.

வாய் நாற்றம் குணமாக நாட்டு மருத்துவம் :-
Nattu maruthuvam – சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.

உதட்டு வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் :-
பல பயன்களை தரும் மருத்துவ குறிப்பு..!

கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.

செரிமானம் நன்கு அடைய பாட்டி வைத்தியம் :-
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.

குடல் புண் குணமாக பாட்டி வைத்தியம் :-
மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம் :-
வெந்தியத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக பாட்டி வைத்தியம் :-
செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

சீத பேதி குணமாக பாட்டி வைத்தியம் :-
தினமும் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் :-
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

மூச்சிப்பிடிப்பு தொல்லை குணமாக பாட்டி வைத்தியம் :-
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுடவைக்கவும். பின்பு அவற்றை மூச்சிப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சிப்பிடிப்பு குணமாகும்.

சரும நோய்கள் குணமாக சித்த மருத்துவம் :-
கமலா ஆரஞ்சை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் சோப்புக்கு பதிலாக உடம்புக்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.

தேமல் குணமாக சித்த மருத்துவம் :-
வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம் குணமாக சித்த மருத்துவம் :-
கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூலம் பிரட்சனைகள் குணமாகும்.

தீப்புண் குணமாக சித்த மருத்துவம் :-
வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

மூக்கடைப்பு குணமாக சித்த மருத்துவம் :-
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இருவேளை குடித்து வர மூக்கடைப்பு தொல்லை குணமாகும்.

வரட்டு இருமல் குணமாக சித்த மருத்துவம் :-
எலுமிச்சம் பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர வரட்டு இருமல் குணமாகும்.

Rates : 0