மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா

மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா


தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1
காய்கறிகள் (பிடித்த 4 அல்லது 5 காய்கறிகள்) – 1கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – கொஞ்சம்
சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

சமையல் செய்முறை 1:

எண்ணெய் தவிர மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். சாதம் மையும் அளவிற்கு பிசைந்து இருக்க வேண்டும்.

வறுத்த பொரி கடலை மாவு அல்லது பேசன் மாவு உபயோகிக்கலாம் அதை ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே பிசைந்து வைத்த மாவை நன்கு தட்டையாக தட்டி கொள்ள வேண்டும் அதாவது கட்லட் வடிவத்தில் தட்டியிருக்க வேண்டும்.

சமையல் செய்முறை 2:

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

எண்ணெய் காய்ந்த உடனே உருட்டி வைத்துள்ள கட்லட்யை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு பொரிக்க வேண்டும்.

பொன்நிறமாகும் வரை பொரிக்க வேண்டும், திருப்பி கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் கருகி போய்விடும்.

நன்கு பொரிந்த பிறகு ஈரப்பதம் இல்லாத தட்டில் வைக்கவும்.

அம்புட்டுதா சுவையான ரைஸ் கட்லட் ரெடி, இதற்கு சாஸ் அல்லது புதினா, காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் குளிருக்கு எத்தனை நாம் சாப்பிடுவோம் என்றே தெரியாது. அப்படியே இலகுவாகவும் மிதமாகவும் ருசியாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் டிரை செய்து பாருங்கள்