மழை காலத்திற்கு ஏற்ற மசாலா டீ செய்முறை

மழை காலத்திற்கு ஏற்ற மசாலா டீ செய்முறை


தேவையான பொருட்கள்:

பால் – 200 கிராம்
டீத்தூள் – ஒரு ஸ்பூன்
சர்க்கரை – இரண்டு ஸ்பூன்
மிளகு – 5
பட்டை – ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 1
இஞ்சி – துருவியது 1/2 ஸ்பூன்


செய்முறை

அடுப்பில் பாலை ஊற்றி சிறிதளவு தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சவும்.

பால் நன்றாக சுண்டியதும் அவற்றில் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு இடித்து வைத்துள்ள மசாலாவை கொதிக்கும் டீயில் சேர்த்து 4 முறை கொதிக்க வைத்து வடிகட்டினால் போதும் சுவையான மழை காலத்திற்கு ஏற்ற மசாலா டீ தயார்.

Rates : 0