பன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி

பன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி


தேவையான பொருட்கள்:

தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பன்னீர் – 250 கிராம் சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
சீரகம் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 பழம் அளவு
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
Bamboo Skewers – 5
குடைமிளகாய் – 2 சதுரமாக நறுக்கி கொள்ளவும்
பெரிய வெங்காயம் – 1 சதுரமாக நறுக்கி கொள்ளவும்
தக்காளி – 1 சதுரமாக நறுக்கி கொள்ளவும்

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 1
இந்த பன்னீர் டிக்கா செய்முறை மிகவும் எளிமையாக இருக்கும். சரி வாங்க எளிமையான இந்த பன்னீர் டிக்கா செய்முறை விளக்கத்தை இப்போது நாம் படித்தறிவோம்.

இந்த பன்னீர் டிக்கா (paneer tikka) செய்வதற்கு முதலில், ஒரு சுத்தமான பௌளை எடுத்து கொள்ளவும் அவற்றில் 1/2 கப் தயிர் ஊற்றி, அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 மல்லி தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள், 1 ஸ்பூன் சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், சோம்பு 1/4 ஸ்பூன், ஒரு ஸ்பூன் ஆயில், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 2
பின்பு அதனுடன் 1 1/2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 3
பின்பு அதனுடன் சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 4
பிறகு இந்த கலவையை 1/2 நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 5
1/2 மணி நேரம் கழித்த பின், அவற்றை எடுத்து Bamboo Skewers இந்த குச்சியில் சொருகிவிட வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 6
அதாவது இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை சொருகி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 7
பின்பு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, தோசை கல் நன்றாக சூடேறியதும் குச்சியில் சொருகி வைத்துள்ளதை எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவைக்க வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 8
இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் திருப்பி போட்டு வேகவைக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான பன்னீர் டிக்கா செய்முறை (paneer tikka) முடிந்துவிட்டது. அருமையான இந்த சைனீஸ் பன்னீர் டிக்காவை (paneer tikka) அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.