தயிர் சாதம் செய்முறை விளக்கம் | Tamil Serial Today-247

தயிர் சாதம் செய்முறை விளக்கம்

தயிர் சாதம் செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் – ஒரு கப்
கடுகு – 1/4 ஸ்பூன்
வெள்ளை உளுந்து – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி பொடிதாக நறுக்கியது – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2 (பொடிதாக நறுக்கியது)
தயிர் – 1/4 கப்


செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்கு சூடேறியதும் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து பொரித்து கொள்ளவும்.

பின்பு பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கவும், பிறகு 1/4 தயிர் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்பு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார்.