டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை

டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை


தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
பன்னீர் – 200 கிராம்
இனிப்பு இல்லாத கோவா – 200 கிராம்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு கப்
நெய்
சூடான பால் – ஒரு மேசைக்கரண்டி
கொக்கோ தூள் – 2 தேக்கரண்டி
பிஸ்தா – பொடிதாக நறுக்கியது சிறிதளவு


செய்முறை:

Double Decker Kalakand Sweet Recipes Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து சுண்டியதும். துருவி வைத்துள்ள பன்னீரை இந்த பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பன்னீர் சேர்த்த பிறகு இதனுடன இனிப்பில்லாத கோவாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பன்னீரும், கோவாவும் பாலில் நன்றாக மிக்ஸ் ஆனதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவையானது நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும்.

கலவை ஓரளவு கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

Double Decker Kalakand Sweet Recipes Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 2
பின்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலவையை கிளறிவிட வேண்டும். சர்க்கரை சேர்த்தவுடன் கலவையானது கொஞ்சம் இளகும் பயப்பட வேண்டாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி, கலவையை சரிபாதியாக பிரித்து கொள்ளவும்.

இப்பொழு ஒரு கேக் டின் அல்லது சதுரமான ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் நெய் தடவி செய்து வைத்துள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையின் ஒரு பாதியை எடுத்து இந்த கேக் டின்னில் சேர்த்து சமன் படுத்த வேண்டும்.

Double Decker Kalakand Sweet Recipes Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 3
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் ஒரு மேசைக்கரண்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். இந்த கலவையை மீதியுள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையையும் அதே கேக் டின்னில் வைத்துள்ள கலவையின் மேல் வைத்து சமம் படுத்த வேண்டும். சமன் படுத்திய பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பிஸ்தாவை இந்த கலையின் மேல் தூவிவிட்டு ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு அழுத்திவிடவும். இவ்வாறு செய்வதினால் பிஸ்தா உதிராமல் இருக்கும்.

Double Decker Kalakand Sweet Recipes Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 4
செய்து வைத்துள்ள இந்த கலாகண்ட் ரெசிபி நன்கு ஆறும்வரை அதாவது 1 முதல் 2 மணி நேரம் வரை கேக் டின்னில் வாய்த்திருக்க வேண்டும். அப்போதுதான் கலாகண்ட் ரெசிபி நன்கு செட்டாகும்.. தேவையெனில் 1 மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைக்கலாம்.

ஒரு மணிநேரம் கழித்து தங்களுக்கு எவ்வளவு சயிஸ் வேண்டுமோ, அந்த அளவிற்கு கட் செய்து கொள்ளவும் அவ்வளவு தான் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் ரெசிபி தயார்.

கண்டிப்பாக தங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ஸ்விட் ரெசிபி (Sweet Recipes Tamil) இதுவே.

Rates : 0