செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் தயார் செய்வது
தனியா – 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 8
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 2

இவற்றை எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் விழுது தயாரிப்பதற்கு:
தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க:
பட்டை – சிறிது
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி


செய்முறை:

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 1
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 2
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 3
அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை: 4
ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

அவ்வளவுதான் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை முடிந்தது, சுவையான மட்டன் குழம்பை அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

Rates : 0