சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்

சர்க்கரை நோய் அறிகுறிகள் (Diabetes symptoms) : 1
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள் (Diabetes symptoms): 2
அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

சர்க்கரை நோய் அறிகுறிகள் (Diabetes symptoms): 3
கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள் (Diabetes symptoms): 4
ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம். ஆகையால் சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

30 நாளில் சர்க்கரை நோய் சரியாக இந்த ஒரு பானத்தை குடித்தால் போதும். சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும். இருப்பினும் இந்த பானத்தை தொடர்ந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும்.

சர்க்கரை நோய் குணமாக அற்புத பானம் செய்ய தேவையான பொருட்கள்:-
பெரிய நெல்லிக்காய் – 1
பாகற்காய் – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு
சர்க்கரை நோய் குணமாக அற்புத பானம் செய்முறை..!
சர்க்கரை நோய் நாட்டு வைத்தியம்: முதலில் நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதேபோல் பாகற்காயையும் அவற்றில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

இப்போது மிக்சியில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய், பாகற்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த கலவையை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

அவ்வளவுதான் சர்க்கரை நோய் குணமாக பானம் தயாரித்துவிட்டோம்.

சுவை:
இந்த பானம் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு சுவையுடையதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்–> குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்
அருந்தும் முறை:
சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்: காலை எழுந்தவுடன் பல் துளைக்கிவிட்டு வெறும் வயிற்றில் இந்த பானத்தை அருந்த வேண்டும். பானம் அருந்திய பின்பு, குறைந்தது அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக (diabetes treatment at home) இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்துவர சர்க்கரை நோய் முற்றிலும் சரியாகிவிடும்.

சக்கரை நோய் அளவு :
சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை முதல் முறையாக செய்கையில், வெறும் வயிற்றில் நமது உடலில் உள்ள ரத்த சக்கரை அளவு சராசரியாக 80 முதல் 100 மி.கி./டெ.லி. வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு சக்கரை நோய் இல்லை என்று அறிந்துகொள்ளலாம்.

வெறும் வயிற்றில் ரத்த சக்கரை அளவு 101 முதல் 125 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.

ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி ஆகும். அதுவே சக்கரை அளவு 125 மி.கி./டெ.லி க்கு மேல் இருந்தால் நமது உடலில் சக்கரை நோய் உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

சக்கரை நோய் அளவு :
உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ரத்த சக்கரை அளவை பரிசோதிக்கயில் சக்கரை அளவு 111 முதல் 140 மி.கி./டெ.லி வரை இருந்தால் உடலில் சக்கரை அளவு சரியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சக்கரை நோய் அளவு:
அதுவே சக்கரை அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி வரை இருந்தால் நாம் சுதாரித்துக்கொள்ளவேண்டும். ஏன் என்றால் இந்த அளவு என்பது சக்கரை நோய் நமக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.

சக்கரை நோய் அளவு:
சக்கரை அளவு 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நாம் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது.