எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை

எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்:

பால் ஆடை – 10 அல்லது 20 நாட்கள் சேர்த்து கொள்ளவும்.
உறை மோர் – சிறிதளவு
ஐஸ் க்யூப் – 10
முருங்கை கீரை – ஒரு கொத்து


செய்முறை:

நெய் செய்முறை பொறுத்தவரை நாம் தினமும் பால் காய்ச்சும் பொழுது, அதில்படியும் ஆடையை ஒரு டப்பாவில் போட்டு 10 அல்லது 20 நாட்கள் ஃபிரிட்ஜியில் சேர்த்து வரவும்.

ஓவ்வொரு நாளும் ஆடையை சேர்த்து தினமும் பாட்டிலில் போட்டு சேர்த்து வரவும்.

ஒரளவு பாலாடை சேர்ந்த பிறகு, அந்த பாலாடையில் கொஞ்சம் உறை மோரை ஊற்றி 5 மணி நேரம் வெளியே வைத்து உறைய வைக்க வேண்டும்

5 மணி நேரம் முடிந்த பின்பு மீண்டும் ஃபிரிட்ஜியில் குளிர வைக்க வேண்டும்.

குளிர்ந்தவுடன் வெளியே எடுத்து ஐஸ்க்யூப் சேர்த்து மிக்ஸியில் ஐந்து நிமிடம் அடிக்க வேண்டும்.

இவ்வாறு மிக்ஸியில் அடித்தால் வெண்ணை தனியாக திரண்டு வரும் அதில் கிடைக்கும் மோர் கசக்காமல் இருந்தால் மோர் குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.நெய் மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்த வெண்ணெயை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்த வெண்ணெயை போட்டு உருக்க வேண்டும்.

வெண்ணெய் உருகி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

வெண்ணெய் உருகி நெய் பதம் வந்ததும் ஒரு கொத்து முருங்கை கீரையை போடவும்.

முருங்கை கீரை பொறிந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.

ஆறியவுடன் ஒரு பாட்டிலில் அந்த நெய்யை வடிகட்டி வைக்கவும்.

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து லேசாக உறைய ஆரம்பிக்கும்.

இந்த நெய் எலுமிச்சை நிறத்தில் பார்க்க அழகாகவும் மிகவும் மணமாகவும் இருக்கும்.

மிக சுவையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய சுத்தமான நெய் ரெடி.

இந்த நெய்யை குழந்தைகளுக்கு சாதத்தில் விட்டு பிசைந்தும், பருப்புடனும், முட்டை பொரிக்கவும், பாயாசம், ஸ்வீட் என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

Rates : 0