உடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்

உடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்


தேவையான பொருட்கள்:

பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்கு பவுடர் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்


செய்முறை

முதலில் ஒரு கடாயில் வெல்லத்தினை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகினை தயார் செய்து கொள்ளவும்.

வெல்லம் நன்றாக பாகு நிலையினை அடைந்தவுடன் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய பாகினை மீண்டும் கடாயில் ஊற்றி அதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து அதில் பொரியினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்போது அடுப்பினை அனைத்து சூடு ஆறுவதற்குள் அதனை உருண்டை வடிவில் பிடித்து தட்டில் வைத்து ஆறவைக்கவும்.

இவ்வாறு அனைத்து பொரியினையும் உருண்டை பிடித்து ஆறவைத்து எடுத்தால் சுவையான பொரி உருண்டை தயார்.