உடலில் அடம்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயை தலைதெறிக்க வைக்கும் அதிர்ஷ்ட விதை இதுதான்

உடலில் அடம்பிடித்து ஒட்டிக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயை தலைதெறிக்க வைக்கும் அதிர்ஷ்ட விதை இதுதான்

நம்முடைய இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த கருஞ்சீரகம்.இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.அதனால், நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

எப்படிப் பயன்படுத்தலாம்? உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம்.இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய்- நமக்கு ஏற்படுகின்ற அதிகப்படியான ஹைப்பர் டென்ஷனை மிகவும் எளிதாக குறைக்கக் கூடியது தான் இந்த கலோஞ்சி என்னும் கருஞ்சீரகம்.இந்த கருஞ்சீரகம் நம்முடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த சர்க்கரை நோய் அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும்.இதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த கலோஞ்சி. இந்த விதைய தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்றாலே பாரிய மாற்றத்தினை உணர முடியும்.