ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி

ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 2
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சை பழம் – 1/2
தண்ணீர் – 1/2 கப்


செய்முறை:

ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்.

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.

5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.

பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு நன்றாக வேக வைத்து, கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழவழப்பு தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

நன்றாக கிளறி ஆற விடவும். ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

குறிப்பு:
லெமன் ஜூஸ் சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
1 பெளல் ஆப்பிள் துண்டுகளுக்கு 1 கப் சர்க்கரை என்ற விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இனிப்பு சுவை அதிகம் தேவைப்பட்டால் அதற்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.